இயற்றியவர் - இறையனார்
குறிஞ்சித்திணை
தலைவன் கூற்று
மலையும் மலை சார்ந்த இடமுமே குறிஞ்சி . தமிழரின் வாழ்க்கை தொடங்கி வளம் பெற்ற இடம் இது. அழகியல் கொட்டிக் கிடக்கும் இடமும் இது தான். குன்றுதோறும் குமரன் இருக்கும் காரணமும் அது தான். தமிழரின் பண்டைய எச்சங்களைத் தாங்கி நிற்பவையே, குறிஞ்சி நிலத் தலைவன் முருகனின் குன்றிலிருக்கும் கோவில்கள்!
குறுந்தொகையில் வரும் கொங்கு தேர் வாழ்க்கை என்ற இந்தப் பாடலைக் கேட்காமல் இருந்திருக்க முடியாது .திருவிளையாடலிலே வரும் திகட்டாத காட்சி இது. இங்கே குறுந்தொகை வழி அப்பாடலின் பொருளைச் சுவைப்போம்.

கொங்குதேர் வாழ்க்கை அம்சிறைத் தும்பி!
காமம் செப்பாது, கண்டது மொழிமோ
பயி்லியது கெழீஇய நட்பின், மயில்இயல்
செறி எயிற்று, அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ? நீ அறியும் பூவே?
காமம் செப்பாது, கண்டது மொழிமோ
பயி்லியது கெழீஇய நட்பின், மயில்இயல்
செறி எயிற்று, அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ? நீ அறியும் பூவே?
கருத்துரை
”பூக்களிலே இருக்கின்ற தேனினை
ஆராய்ந்து உண்ணும் வாழ்க்கையைப் பெற்ற அழகிய சிறகினைப் பெற்ற வண்டே! நான் இன்புற
வேண்டும் என்பதற்காகச் சொல்லாமல், நீ
உண்மையாகவே அறிந்து கண்டதைக் கூறு-வாயாக. என்றும் என்னோடு பொருந்திய,
உரிமை
நட்பினைக் கொண்டவள் என் தலைவி. மயில் போன்ற மென்மையும் வரிசையான பற்களும் கொண்ட
அவளின் கூந்தலிலே வீசுகின்ற மணத்தைப் போல, நீ
அறிந்த மலர்களிலே மணமுடைய மலர்களும் உள்ளனவா?”
தலைவியோடு கூடி மகிழ்ந்த போது, அவளின் கூந்தல் இவனுக்கு மலரினும் மணம் வீசியது. அந்த உள்ள மகிழ்வினை மனிதர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியவில்லை.அவர்கள் இருவரும் இருப்பது மலை அடர்ந்த குறிஞ்சி நிலம். அங்கே மலர்ந்து கிடக்கும் கோடிக்கணக்கான மலர்களிலே தேனெடுக்க வண்டு வந்தது. பார்த்தான். வண்டு மலர் விட்டு மலர் தாவி ஆராய்ந்து தேனெடுக்கும் அழகைக் கண்டான். வண்டே! நீ ஆராய்ந்து தேனெடுக்கும் அறிவு பெற்றிருப்பதால் உன்னிடமே கேட்கின்றேன். என் தலைவியின் கூந்தலில் வீசும் மணத்தினைப் போல நீ தேனெடுக்கும் மலர்களிலே மணம் வீசும் மலர்களும் இருக்கின்றனவா? என்கிறான்.
தலைவியோடு தான் கொண்ட நட்பு பயிலியது கெழிஇய நட்பு என்கிறான்.உள்ளம் பொருந்திய உரிமையான நட்பு என்று தனக்கும் தலைவிக்குமான உறவின் மேன்மையினை நாகரிகமான சொற்களால் நயமாக உணர்த்துகின்றான்.இவனும் தலைவியும் சந்தித்திருக்கும் இடம் மலைப்பகுதி என்பதால் மயில்கள் உலவுகின்றன.(இதனால்தான் முருகனுக்கும் மயிலை வாகனமாக வைத்தனர்.)அதைப் பார்க்கும்போது கூட தான் தழுவிய தலைவியின் இயல்புதான் நினைவுக்கு வருகிறது.அதனால்தான் தலைவியின் இயல்பினை, “மயில் இயல்“ என்கிறான்.
தலைவியைத் தான் சந்தித்தபோது தலைவியின் முகத்தில் தெரிந்த முறுவலும், தழுவிய போது உணர்ந்த அவள் உடலின் மென்மையும் கூந்தலில் நுகர்ந்த மணமும் இயற்கைச் சூழலில் தலைவனின் இயல்பான மன உணர்வினைக் காட்டும் இனிய படைப்பானது.தலைவிக்கும் தனக்கும் உள்ள உறவினை ”நட்பு” என்று குறிக்கும் பண்டைத் தமிழரின் பண்பட்ட நிலையினைக் காணும் போதெல்லாம் அடையும் மகிழ்ச்சிக்கு அளவுமுண்டோ?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக