பெரும்பதுமனார்,
பாலைத் திணை- கண்டோர் சொன்னது
உடன்போக்குச் செல்லும் தலைவன், தலைவியைப் பாலைவழியில் பார்த்தோர் கூறியது.
உடன்போக்குச் செல்லும் தலைவன், தலைவியைப் பாலைவழியில் பார்த்தோர் கூறியது.
வில்லோன் காலன கழலே தொடியோள்
மெல்லடி மேலவும் சிலம்பே நல்லோர்
யார்கொல் அளியர் தாமே ஆரியர்
கயிறாடு பறையில் கால்பொரக் கலங்கி
வாகை வெண் நெற்று ஒலிக்கும்
வேய்பயில் அழுவம் முன்னி யோரே.
மெல்லடி மேலவும் சிலம்பே நல்லோர்
யார்கொல் அளியர் தாமே ஆரியர்
கயிறாடு பறையில் கால்பொரக் கலங்கி
வாகை வெண் நெற்று ஒலிக்கும்
வேய்பயில் அழுவம் முன்னி யோரே.
கருத்துரை
ஆரியக் கூத்தர்
கயிற்றில் நின்று ஆடும்போது முழக்குகின்ற பறை போல பாலைவழியில்,
வாகைமரத்தின் வெண்மையான நெற்றுக்கள் காற்று மோதுவதால் அசைந்து ஒலி எழுப்பும். இத்தகைய
மூங்கில்கள் நிறைந்திருக்கின்ற வழியில் செல்ல முற்பட்ட வில்லையுடைய இவனின் காலில்
வீரக்கழலை அணிந்துள்ளான். தோள்வளையணிந்த இப்பெண்ணின் மெல்லிய பாதத்தின் மேல்
சிலம்பு அணிந்துள்ளாள். இரங்கத்தக்க இந்நல்லோர் யாரோ?
சொற்பொருள்
விளக்கம்
வில்லோன்-வில்லையுயை
தலைவன், காலன கழலே- காலில் அணிந்துள்ளது கழல், தொடியோள்- தொடியணிந்த பெண், மெல்லடி – மென்மையான, மேலவும் சிலம்பே - மேலே இருப்பது சிலம்பு, நல்லோர் – நல்லவராய்
இருப்போர், யார்கொல் – யாரோ? அளியர் தாமே – இரங்கத்தக்கவர்களே, ஆரியர்-ஆரியர்,
கயிறாடு பறையில்- கயிற்றில் ஆடுகின்றபோது அடிக்கின்ற பறைபோல, கால்பொரக்
கலங்கி – காற்று அலைப்ப நிலை
கலங்கி, வாகை வெண் நெற்று – வாகை மரத்தின் வெண்மையான நெற்று, ஒலிக்கும்
– ஒலி எழுப்பும், வேய்பயில் - மூங்கில்கள் நெருங்கிய, அழுவம் – பாலைநிலம், முன்னியோரே – முற்பட்டு எழுந்தோர்.
ஆரியர்: கயிற்றில் கட்டித்தொங்கவிடப்பட்ட பறையை கழுத்தில் தொங்கவிட்டு அடித்து இசையெழுப்பிக் கால்களால் பறையடிக்கு ஏற்ப ஆடித்திலைப்போர் வாழும் பகுதிநோக்கிச் செல்லும் பெண்ணின் சிலம்பும் அப்பெண்ணுடன் செல்லும் வில்வேடனின் கழலும் குறிப்பிடப்படுகின்றன. ஆயினும் அவர்களைக்கண்ட மக்கள் அப்பெண்ணுக்குக்காக மனம்கலங்குகின்றனர். உரையெழுதியோரின் எண்ணம் என்ன என்பதை அவர்களது உரை வெளிப்படுத்துகின்றன. எங்கே ஆரியரை பறையடிப்போராகக் குறிப்பிட்டு இழிவுபடுத்தி விடுவார்களோ என்கிற அச்சத்தையே உரைகளில் நாம் காண்கிறோம்.
பதிலளிநீக்கு